பல்லவியும் சரணமும் - 15
இன்னும் சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், திரைப்படத்தையும் கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!
ஓருவர் ஒரு முறை பின்னூட்டமிடும்போது, 3 அல்லது 4 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு பத்துக்கும் விடைகள் தெரிந்திருந்தாலும் கூட :-)) ஏனென்றால், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே! 2 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!
1. நீ தானே என்னுடைய ராகம் என் நெஞ்செல்லாம் உன்னுடைய தாளம்...
2. கள்ள விழி கொஞ்சம் சிரிப்பதென்ன? கைகள் அதை மெல்ல மறைப்பதென்ன ...
3. அஞ்சி ஒதுங்குது மாராப்பு இன்னும் எதுக்கு இந்த வீராப்பு ...
4. காதல் என்னும் பள்ளியிலே கதை படிக்க வருவாளோ ...
5. நான் பாடும் கீதங்கள் என் வண்ணம்! இரண்டு நதிகளும் ...
6. வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்...
7. கை விரலில் ஒரு வேகம், கண்ணசைவில் ஒரு பாவம் ...
8. காதல் தோன்றுமா, இன்னும் காலம் போகுமா? ...
9. அவன் அறுஞ்சுவை பாலென ஏன் சொன்னான் அது கொதிப்பதனால் ...
10. அமைதியில்லாத நேரத்திலே அந்த ஆண்டவன் எனையே படைத்து விட்டான் ...
11. அப்பாவி ஆண்கிளி தப்பாக நினைத்தது அப்போது புரிந்ததம்மா ...
12. மந்திரக் கண்ணாலே தந்திர வலை வீசும் சுந்தர ...
என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!
என்றென்றும் அன்புடன்
பாலா
7 மறுமொழிகள்:
4. வாராதிருப்பாரோ வண்ணமலர் கன்னியவள்..
6. மயக்கமா கலக்காமா...!
7. ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான்...
12, வசந்த் முல்லை..
இது தவிர 5 உடனடியாய்ப் சொல்லமுடியும், மற்றவர்கள் யோசிக்கட்டுமே!
11. கடவுள் அமைத்து வைத்த மேடை
9. கம்பன் ஏமாந்தான்
விதிகளை மீறுவதற்கு மன்னிக்கவும். தூக்க கலக்கத்திலிருந்து பதிந்தது.
2. போக போக தெரியும்?
1. மதுர மருக்கொழுந்து வாசம்.. என ராசாத்தி..
3. அம்மாடி.. இதுதான் காதலா....
11. கடவுள் அமைத்து வைத்த மேடை...
- சீமாச்சு...
8. பாட்டுப் பாடவா? பார்த்துப் பேசவா? பாடம் சொல்லவா? பறந்து செல்லவா?
5. என் வானிலே - ஜானி
நண்பர்களே,
பயங்கர 'சுஸ்து' பா, நீங்கள் எல்லாரும் :-) என்ன ஸ்பீடு?!?!
NARAIN,
//விதிகளை மீறுவதற்கு மன்னிக்கவும். //
என்ன மீறல்? புரியவில்லை!என்றென்றும் அன்புடன்
பாலா
Post a Comment